×

2 வெவ்வேறு ஊழல் வழக்குகள் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

டாக்கா: வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் 2 ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஒரு வழக்கில், அரசு வீட்டுவசதி திட்டத்தில், நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கில், தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள புர்பச்சோலில் ராஜூக் புதிய நகர திட்டத்தின்கீழ், ஷேக் ஹசீனாவின் மருமகளும், இங்கிலாந்து தொழிலாளர் கட்சி எம்பியுமான துலிப் ரிஸ்வானா சித்திக் உள்பட மற்றவர்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மருமகன் துலிப் ரிஸ்வானா சித்திக்குக்கு 2 வழக்குகளில் தலா 2 ஆண்டுகளும், மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்க்பட்டுள்ளது.

Tags : Bangladesh ,Sheikh Hasina ,Dhaka ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மெகா ஆபரேஷன்: 145 பலூச் போராளிகள் சுட்டுக்கொலை