×

அமேசானை தொடர்ந்து 30 ஆயிரம் பேரை நீக்குகிறது ஆரக்கிள்

நியூயார்க்: அமேசானை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனம் சமீபத்தில் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கியது. ஏஐ வரவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆரக்கிள் நிறுவனமும் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஆரக்கிள் நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை என்று இது கூறப்படுகிறது. அந்த நிறுவனம் ஓபன்ஏஐ உடனான ரூ.27 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் அதிக செலவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 20,000 முதல் 30,000 வேலைகளைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் ரூ.91 ஆயிரம் கோடி சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பணம் சாம் ஆல்ட்மேனின் நிறுவனத்திற்கு சேவை செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : Oracle ,Amazon ,New York ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மெகா ஆபரேஷன்: 145 பலூச் போராளிகள் சுட்டுக்கொலை