ஒன்றிய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது. தேசத்தின் பெண்களின் அதிகாரமளிக்கப்பட்ட உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த பட்ஜெட் லட்சியமானது . தேசத்தின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கிறது. கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு எதிர்கால நோக்குடைய மற்றும் உணர்திறன் கொண்ட பட்ஜெட்டை வழங்கியதற்காக நிதியமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
இந்த பட்ஜெட் மகத்தான வாய்ப்புகளை உருவாக்கி, நிகழ்காலத்தின் கனவுகளை நிறைவேற்றி, இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான உயர் பயணத்திற்கு இந்த பட்ஜெட் அடிப்படையாக அமையும் .
இந்தியா பயணிக்கும் சீர்திருத்த விரைவு ரயில் இந்த பட்ஜெட் மூலம் புதிய ஆற்றலையும் புதிய உத்வேகத்தையும் பெறும். இந்த முன்னோடிச் சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஆர்வமும், துணிச்சலும், திறமையும் கொண்ட இளைஞர்களுக்குப் பறந்து உயர ஒரு திறந்த வானத்தை வழங்குகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
