சென்னை: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.49 முதல் ரூ.52 வரை அதிகரித்துள்ளனர்.
சென்னையில் கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,849.50 என இருந்தநிலையில், ரூ.50 அதிகரித்து ரூ.1,899.50 ஆகவும், சேலத்தில் ரூ.1,799ல் இருந்து ரூ.49.50 அதிகரித்து ரூ.1,848.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரித்தது. நடப்பு மாதம் ரூ.50 அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2 மாதமாக ரூ.160 விலை உயர்ந்திருப்பதால், ஓட்டல் தொழில் மற்றும் இதர உணவு பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
