×

ஒன்றிய அரசில் ஐஜி பதவிக்கு தகுதி பெற 2011ம் ஆண்டு முதல் ஐபிஎஸ் ஆனவர்களுக்கு 2 ஆண்டு ஒன்றிய அரசு பணி கட்டாயம்: உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘‘2011ம் ஆண்டு பேட்ச் முதல் ஒன்றிய அரசில் ஐஜி/அதற்கு இணையான பதவியில் ஐபிஎஸ் அதிகாரிகளை பட்டியலிடுவதற்கு எஸ்பி/ டிஐஜி அல்லது அதற்கு இணையான மட்டத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒன்றிய அரசுப்பணி அனுபவம் கட்டாயமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசில் போதுமான கள அளவிலான பணி அனுபவம் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பணிக்கு அனுப்பப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதேபோன்ற ஒரு தேவை இருந்தபோதிலும், ஆயுதக் காவல் படைகள் மற்றும் ஒன்றிய அரசியல் ஐஜி மட்டத்தில் உள்ள பிற பதவிகளுக்கு நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற கட்டாயத் தேவை எதுவும் இல்லை.

Tags : IG ,Union Government ,Home Ministry ,New Delhi ,Union Home Ministry ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலையொட்டி...