×

பா.ஜ ஆளும் மாநிலத்தில் தான் இந்த கூத்து காருக்கு கைவிலங்கு போட்ட மத்தியபிரதேச போலீசார்: வீடியோ வைரலாகி சர்ச்சை

ஜபல்பூர்: மபியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு காருக்கு கைவிலங்கு போட்ட வீடியோ இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு மோகன்யாதவ் முதல்வராக உள்ளார். மத்தியப் பிரதேச காவல் நிலையத்தில் ஒரு காருக்கு கைவிலங்கிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார், காவல் நிலைய வளாகத்திற்குள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீடியோ இப்போது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜபல்பூரில் உள்ள லார்ட்கஞ்ச் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தமோ நாக்காவைச் சேர்ந்த பிரதம் குமார் என்பவர் காரில் வந்த போது போலீசாரின் வாகன சோதனையின் போது மதுபோதையில் சிக்கினார். இதில் வாகனம் ஓட்டியபோது பிடிபட்டதால் அவர்வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பிரதம்குமார் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வந்த காார் போலீஸ் நிலையத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்புக் காரணங்கள் என்று கூறி அதிகாரிகள் காரை கைவிலங்கால் பிணைத்தனர். கைவிலங்கு காரின் சக்கரத்திலும், மறுமுனையை பின் இருக்கை கைப்பிடியிலும் விலங்கிட்டுப் பூட்டினர். பின்னர் கைவிலங்குகளுக்குப் பதிலாக சங்கிலியைப் பயன்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

* கைவிலங்கு போட்டது ஏன்?
இதுபற்றி லார்ட்கஞ்ச் காவல் நிலைய தலைமை காவல் கண்காணிப்பாளர் ரித்தேஷ் ஷிவ் கூறுகையில்,’ சட்டப்பிரிவு 185ன்(குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்) கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக கார் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கைவிலங்குகள் குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டன, பின்னர் அதற்குப் பதிலாக சங்கிலி பயன்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட காவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றாா்.

Tags : Madhya Pradesh ,BJP ,Jabalpur ,Mabi ,Mohan Yadav ,Chief Minister ,Madhya Pradesh… ,
× RELATED மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை...