திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த வருடம் எட்டாம் வகுப்பு படித்த மிதுன் என்ற ஒரு மாணவன் பள்ளியில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இந்த மாணவனின் குடும்பத்தினருக்கு சாரணர் இயக்கம் சார்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கொல்லம் தேவலக்கரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது: பத்தாம் வகுப்புக்கு பாடங்கள் அதிகமாக இருப்பதாக நீண்ட காலமாக மாணவர்கள் புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக சமூக அறிவியலில் பாடங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக ஏராளமான மாணவர்கள் கூறினர். எனவே அடுத்த வருடம் முதல் பத்தாம் வகுப்புக்கு 25 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
