புதுடெல்லி: புதிய கலால் வரி அமலுக்கு வருவதால் சிகரெட், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களின் விலை இன்று கூடுகிறது. சிகரெட், பான்மசாலா, புகையிலா பொருட்கள் ஆகியவற்றின் மீது இன்று முதல் புதிய கலால் வரி விதிக்கப்படுகிறது. மேலும் புதிய சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இதனால் சிகரெட், பான் மசாலா விலை இன்று முதல் உயருகிறது. பான் மசாலா மீதான ஒட்டுமொத்த வரிச்சுமை, 40 சதவீத ஜிஎஸ்டி உட்பட, தற்போதைய 88 சதவீத அளவிலேயே இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
