சுகாதார ஆய்வாளர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.30:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் தேனியில் நேற்றுஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தாமரைக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். இதில் மாநில துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட இணைச்செயலாளர் சுல்தான் இப்ராஹிம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, அரசின் முரண்பாடான கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசின் மெத்தனத்தால் 14 ஆண்டுகள் தாமதமாக பணி நியமிக்கப்பட்ட 750 சுகாதார ஆய்வாளர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். கொரோனா காலத்தில்பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்களை நிலை 2லிருந்து நிலை ஒன்றாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் கோஷம் எழுப்பினர். மாவட்ட தணிக்கையாளர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories: