இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.19 சதவீத வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : சென்னையில் நடைபெறும் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “இந்திய அரசியலில் தனித்துவமான மாடல் திராவிட மாடல். இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.19 சதவீத வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப திமுக கொள்கைகளும் மாற்றம் அடைந்து வருகின்றன. சமூகத்தில் எந்த பிரிவினரும் தனித்துவிடக்கூடாது என்பதால்தான் திமுக பார்த்து பார்த்து திட்டங்களை செய்கிறது.நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்கள் எங்கள் திட்டங்களை பின்பற்றுவதுதான்.நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம். தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த துரோகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: