சிபிஐ மூலம் நெருக்கடி கொடுத்து விஜயிடம் பாஜ ரகசிய ‘டீல்’: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட விவகாரத்தால் விஜய் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முதல்கட்ட விசாரணை முடிந்த பிறகு, வெளியில் வந்த விஜய் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். மேலும் காரின் பின் சீட்டில் அமர்ந்து புறப்பட்டு சென்றார். ஆனால் 2ம் கட்ட விசாரணைமுடிந்து வெளியில் வந்த போது, சிரித்துக்கொண்டே கையை அசைத்தபடி வந்தார். காரின் முன் சீட்டில் அமர்ந்து பயணித்தார். விஜயின் இந்த மாற்றமே ஏதோ டீலிங் நடந்திருப்பதை உணர்த்துகிறது.

அதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் போட்டியிடும் முக்கிய ெதாகுதிகளில் விஜய் தீவிர பிரசாரம் ெசய்யக்கூடாது. பெயரளவுக்கு தான் பிரசாரம் செய்ய வேண்டும். முடிந்தால் அதையும் தவிர்ப்பது நல்லது. அங்கு தவெக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்ய வேண்டும். 2029ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வந்து விட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பாஜ விதித்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த டீலுக்கு மறுப்பு ெதரிவித்த விஜய் பின்னர் ஓகே சொல்லி விட்டாராம்.

அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவெடுக்க வேண்டும், எப்படி பிரசாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நானே கவனித்து கொள்கிறேன். நீங்கள் யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தவெக முக்கிய நிர்வாகிகளிடம் விஜய் கறாராக கூறி விட்டாராம். மேலும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் விஜய்யே தயாரித்துள்ளாராம். பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம் வெளியான பின், விஜய் தயாரித்திருக்கும் பட்டியலில் மாற்றம் ஏற்படும் என்றனர்.

செல்போன் எண்களை அடிக்கடி மாற்றும் விஜய்
சிபிஐ விசாரணைக்கு சென்று வந்த பிறகு தனது செல்போனில் ஏதாவது முக்கிய விஷயங்கள் பேசுவது என்றாலும் நிர்வாகிகளை தவிர்த்து விட்டு தனி அறைக்கு சென்று தான் பேசுகிறாராம். மேலும் செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றம் செய்து புதுப்புது எண்களில் பேசி வருகிறாராம்.

Related Stories: