நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விஜய்: ஜனநாயகனா? சட்டமன்ற தேர்தலா? முடிவு செய்யலன்னா அரசியல் அவ்ளோ தான்; எம்ஜிஆரை உதாரணம் காட்டி அட்வைஸ் செய்த செங்கோட்டையன்

சென்னை: ஜனநாயகன் படமா, சட்டமன்ற தேர்தலா என்பதை முடிவு செய்யாவிட்டால் அரசியலில் காலியாகி விடுவோம் என்ற செங்கோட்டையனின் ஆலோசனையை விஜய் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளால் டோட்டல் அப்செட்டில் இருக்கும் விஜய் குழப்பத்தில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. தனது கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு உண்டு என்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசியலில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் இதுவரை தவெக கூட்டணியில் எந்த ஒரு கட்சியும் இணையவில்லை. இது தவெக தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கரூர் விவகாரத்தால் விஜய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார். அதன் பின்பு தேர்தல் களத்தில் எந்த பரபரப்பும் இல்லாமல் மவுனம் காத்து வருவது விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாஜ போன்ற தேசிய கட்சிகளின் மறைமுக அழுத்தங்களால் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு விஜய் ஆளாக்கப்பட்டுள்ளதால் அவர் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வெளியாக முடியாமல் சிக்கலில் தவித்து வருவது விஜய்க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால், அன்றைய தினம் ஜனநாயகன் படம் வெளியிட தடை செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து படத்தை வெளியிட விஜய் தரப்பு எவ்வளவோ முயன்றும் இன்று வரை அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பது விஜய்க்கு கடும் அழுத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளை முடித்து பிப்ரவரி 9ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தாலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பணம் கேட்டு விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல வெளி மாநிலங்கள், வெளிநாடுகள், ஓடிடி உரிமை வாங்கியவர்கள் என அனைவரும் இப்படத்தில் முதலீடு செய்திருப்பதால் அவர்களும் பணத்தை திரும்ப கேட்டு விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. சிலர் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு விஜய்யும் மறைமுகமாக முதலீடு செய்துள்ளார் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தயாரித்த கேவிஎன் புரோக்டக்‌ஷன் நிறுவனமும் விஜய்க்கு தொடர்ந்து நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.

இதனால் தான் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்காமல் புஸ்ஸி ஆனந்தை அனுப்பி வைத்தார். இந்த நெருக்கடியான நிலையில், விஜய்யை, செங்கோட்டையன் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, அவர் ஜனநாயகனை விட்டு விடுங்கள் அல்லது தேர்தலை எதிர்பார்க்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அதற்காக அவர் ஒரு கதையை சொல்லி விளக்கியதாகவும் கூறப்படுகிறது. 1977ல் எம்ஜிஆர் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார்.

அவர் ஒரு விழாவில் பேசும்போது, நடிக்கும் போது கிடைத்த வருமானம், முதல்வராக பதவி ஏற்ற பின்பு கிடைக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தை தெரிவித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக எம்ஜிஆர் அறிவித்தார். அப்போது அவருக்கு, கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் படம் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது. ஒன்று திரைப்படத்தில் நடிக்கப் போய் விடுங்கள், இல்லை என்றால் மக்கள் பணியில் கவனம் செலுத்துங்கள் என்ற விமர்ச்சனங்கள் எழுந்தது. அதையும் மீறி ‘உன்னை விடமாட்டேன்’ என்ற படத்தில் நடித்தார்.

இதற்கான கேசட் வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் அந்த படம் பல்வேறு பிரச்னைகளால் கடைசி வர வெளியிட முடியவில்லை. இந்த படத்தில் தான் முதன் முதலாக எம்ஜிஆருடன் இளையராஜா இணைந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த நெருக்கடியான நேரத்தில் எம்ஜிஆரை சந்தித்த நெடுஞ்செழியன், ஒன்று படத்தை விடுங்கள், இல்லை என்றால் அரசியலை விடுங்கள் என்று அறிவுரை கூறியதை செங்கோட்டையன் விஜய்க்கு நினைவுபடுத்தி பேசியுள்ளார். அதேபோன்று தான் இப்போது விஜய்க்கு செங்கோட்டையன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஜனநாயகன் படமா, அரசியலா என்ற கேள்வியை எழுப்பியதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படப் பிரச்னையை தேர்தலுக்கு அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது தேர்தலில் கவனம் செலுத்துவோம் என்ற செங்கோட்டையனின் ஆலோசனையை விஜய் ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் விஜய் கடும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. திரைப்பட விநியோகஸ்தர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் தான் விஜய் தற்போது கவனம் செலுத்தி வருவதாக கூறப்படும் தகவல் தவெகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படப் பிரச்னையை தேர்தலுக்கு அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது தேர்தலில் கவனம் செலுத்துவோம் என்ற செங்கோட்டையனின் ஆலோசனையை விஜய் ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் விஜய் கடும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: