தூத்துக்குடி: நடிகர் விஜய் கட்சியை கலைப்பாரா? என்பது போகப்போக தெரியும் என்று நடிகர் சரத்குமார் கூறினார். தூத்துக்குடியில் நேற்று நடிகர் சரத்குமார் அளித்த பேட்டி: ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார். நடிகர் விஜய்யை வீட்டை விட்டு வெளியே வந்து பேசச் சொல்லுங்கள். எழுதிக் கொடுத்ததை படிக்கிறார். விஜய் கட்சியை கலைப்பாரா என்பது போகப் போக தெரியும். கூட்டம் அனைவருக்கும் வரும். வாக்களிப்பார்களா என்பது குறித்து மக்கள்தான் முடிவெடுப்பார்கள். நான் கட்சியை கலைத்ததற்கும், விஜய்யையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. நான் கட்சியை கலைக்கவில்லை. தேசிய நீரோட்டத்தில் இருக்க இணைத்து கொண்டோம். என்னுடன் பயணித்தவர்களுக்கு வாய்ப்பை வாங்கித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில். நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ராதிகாவும் போட்டியிடவில்லை. இவ்வாறு கூறினார்.
