டெல்லி: இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் குரலுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக நாடாளுமன்றம் திகழ வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது மிக மிக முக்கியமானது என்று கூறினார்.
