தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது : நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “கடந்த10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். உலகின் 3வது பெரிய மெட்ரோ ரயில் சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் தேக்கம் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் அரிசி உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் 150 மில்லியன் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.7 லட்சம் பெண்கள் “மில்லியனர்ஸ்” ஆக உயர்ந்துள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே விவசாயிகள் நன்மையை பெறவே ஜி ராம்ஜி திட்டம் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேசிய உடன், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories: