காஞ்சியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் அனுப்பி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் அனுப்பி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVMs & VVPATs) பயன்பாடு குறித்து நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று என்ற விதத்தில் நான்கு EVMs & VVPATs இயந்திரங்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செயல் முறை விளக்க வாகனங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு கொடி அசைத்து அனுப்பி வைத்தார். மேற்படி வாகனங்களை கொண்டு இன்று முதல் தேர்தல் அறிவிப்பு தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து பகுதிகளிலும் EVMs & VVPATs குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: