திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் 69,726 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் சிலாதோரணம் வரை காத்திருந்தனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று ரதசப்தமி மற்றும் குடியரசு தினவிழாவையொட்டி தொடர் வாரவிடுமுறை என்பதால் இன்றும், நாளையும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: