28ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்: டெல்லியில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுடெல்லி: வருகிற 28ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகின்றது. முதல் நாள் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகின்றது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக அரிய நிகழ்வாக பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்று கிழமையன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் ஆகும்.

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஆளும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜவால் கூட்டப்படும் அனைத்துக்கட்சி கூட்டமானது வருகிற 27ம் தேதி (நாளை மறுநாள்)11மணிக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் பிரதான கமிட்டி அறையில் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Related Stories: