ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 2019ம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளில் ஓஎம்ஆர் தாள்களில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரான அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டு ஒருவாரம் ஆகியும் மாநில அரசு எந்தவொரு தெளிவான அறிக்கையையும் வெளியிடவில்லை.
மாநில அரசின் மர்மமான மவுனம் கவலை அளிக்கிறது. இளைஞர்களுக்கு நீதி வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றது.பூஜ்ய சகிப்புத்தன்மை, கொள்கையை பின்பற்றுவதாக கூறும் பாஜ அரசு 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் அதன் ஆட்சிக்காலத்தில் நடந்த தேர்வு மோசடி குறித்த நியாயமான மற்றும் முறையான விசாரணைக்கான அறிவிப்பை ஏன் தவிர்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
