நெல்லை: அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் புலிகள் கணக்கெடுப்பு பணி முடிவடைவதால் காலை 10 மணி முதல் அனுமதி வழங்கப்படுகிறது
