×

முதலூர் தருமாபுரி-சுப்பராயபுரம் வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

சாத்தான்குளம், ஜன. 24: முதலூர் தருமாபுரி- சுப்பராயபுரம் வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊர் சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி, தட்டார்மடம் போலையர்புரம், பொத்தகாலன் விளை உள்ளிட்ட கிராம ஊர்களுக்கு செல்லும் பிரதான வழியாக உள்ளது. முதலூரில் உள்ள மஸ்கோத் அல்வா கடைகளுக்கு மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஊர் வழியாக கனரக வாகனங்கள், அரசு பேருந்து, தனியார் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இதில் முதலூர் தர்மாபுரி பகுதியில் இருந்து சாத்தான்குளம், சுப்பராயபுரம் செல்ல வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதியில் இதர வாகனங்களும், இருசக்கர வாகனத்தில் வருபவர்களும் அதிவேகத்தில் வந்து செல்கின்றனர். இதனால் பலர் விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது. மேலும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நிகழும் சூழலும் காணப்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு அபாய வளைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை துணை செயலாளர் ஞானமுத்து மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mudalur Darumapuri-Subparayapuram ,Sathankulam ,Mudalur Darumapuri-Subparayapuram curve ,Mudalur ,Udangudi ,Thattarmadam ,Polaiyarpuram ,Potthakalan… ,
× RELATED பிராட்வே பேருந்து நிலையம் மூடல்...