மதுரை திருநகரில் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் 3வது கிளை துவக்கம்

திருப்பரங்குன்றம், ஜன. 29: மதுரை திருநகரில், திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸின் புதிய கிளை திருநகரில் நேற்று திறக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த பிரபல பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்துக்கு மதுரையில் டவுன்ஹால் ரோடு, வில்லாபுரம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. மூன்றாவது கிளை திருநகரில் நேற்று தொடங்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் உரிமையாளர்கள் பாலாஜி, அமர்நாத், வினோத், சாரநாத் அகியோருடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மூத்த தலைவர் ரத்தினவேலு, தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: