×

குளிக்க சென்ற பெண் சாவு

ராஜபாளையம், ஜன. 23: ராஜபாளையத்தில் குளிக்க சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ராஜபாளையம் தென்காசி சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி கலைச்செல்வி. இவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Rajapalayam ,Rajkumar ,Kalaichelvi ,Tenkasi Road, Rajapalayam ,
× RELATED திருச்சியில் சாக்கடைக்குள் விழுந்து சடலமாக மிதந்த பெங்களூர் வாலிபர்