- தேவதானப்பட்டி
- ராஜ்குமார்
- நல்லகருப்பன்பட்டி மேற்கு தெரு
- நல்லகருப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
தேவதானப்பட்டி, ஜன. 23: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (55). இவர் நல்லகருப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். மீண்டும் மறுநாள் நேற்று கடையை திறக்க சென்றபோது கடையிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
கடைக்குள் சென்று பார்த்தபோது கடையிலிருந்த பணம் ரூ.5 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதே போல் அருகேயுள்ள மோகன் என்பவரது பெட்டிக்கடையை உடைத்து அங்கிருந்த பணம் ரூ.3,500 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

