சிறுமி திருமணம் 3 பேருக்கு சிறை

மதுரை, ஜன. 29: சிறுமி திருமணத்திற்கு ஏற்பாடு செய்த வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், செல்லூரைச் சேர்ந்த ஜெயபாண்டிக்கும் கடந்த 2012ல் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. தகவலறிந்த செல்லூர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயபாண்டி, அவரது தந்தை பழனி, பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், மாஜிஸ்திரேட் பத்மநாபன் தீர்ப்பளித்தார். அதில், 3 பேர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டதால் 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: