புதுடெல்லி: வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் ஆணையம் ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடந்த சர்வதேச மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இசிஐ நெட் என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய தலைமை தேர்தல் ஆணையர், ‘பல்வேறு தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டின்போது தேர்தல் ஆணையத்துக்கு எதிரான தவறான தகவல்கள் குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் இசிஐ நெட் செயலியில் தேர்தல் தொடர்பான அனைத்து உண்மைகளும் கிடைக்கும் ’ என்றார்.
