சிவான்: பீகாரில் மாநிலம் தழுவிய சம்ரித்தி யாத்திரையின் ஒரு பகுதியாக முதல்வர் நிதிஷ் குமார் சிவான் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரூ.200கோடி மதிப்புள்ள திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் பெண்களுக்காக அவரது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். அப்போது அங்கிருந்த சில பெண்கள் எழுந்து செல்ல முயன்றனர். இதனை பார்த்து கோபடைந்த முதல்வர் நிதிஷ், ஏன் நீங்கள் அனைவரும் ஓடுகிறீர்கள்? நீங்கள் இங்கே இருந்து நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களுக்காக என்ன செய்யப்படுகின்றது என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என்று கூறி சத்தமிட்டார். இதன் காரணமாக அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
