×

விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிராக ஏழை மக்கள் ஒன்றுபட வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: விபி ஜி ராம் ஜி திட்டத்தை கொண்டு வரும் அரசின் முயற்சிக்கு எதிராக ஏழை மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார். டெல்லியில்,ரச்னாத்மக் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தொழிலாளர்கள் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நோக்கம் ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவது தான்.

தேவைப்படுபவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்த திட்டம் அரசின் மூன்றாம் நிலை அமைப்பான பஞ்சாயத்து மூலமாக செயல்படுத்தப்பட்ட இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை மக்களுக்கும் வேலை செய்வதற்கான உரிமை இருந்தது. அந்த நோக்கத்தை பிரதமர் மோடியும்,பாஜவும் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். ஏனெனில் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு தீர்மானிக்கும். பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக பணம் செல்லும். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு குறைவாக பணம் செல்லும்.

மேலும் எப்போது, ​​எங்கு வேலை நடக்கும், ஒரு தொழிலாளிக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பதை ஒன்றிய அரசு மட்டுமே தீர்மானிக்கும். தொழிலாளர்களின் உரிமைகள் முடிந்துவிட்டன. இப்போது ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரத்துவத்திற்குச் அந்த அதிகாரம் செல்லும். பா.ஜவை தடுக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் விவசாயிகள் அதை தடுத்து நிறுத்தி ரத்து செய்ய வைத்தனர். விவசாயிகளுக்கு செய்த அதே காரியத்தை ஏழை மக்கள் ஒன்றாக நின்றால், மோடி பின்வாங்குவார், பழைய 100 நாள் திட்டம் மீண்டும் நிலைநிறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

* நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்
டெல்லியில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ரத்து செய்யப்பட்டது மகாத்மா காந்தியின் பெயரை மக்களின் நினைவில் இருந்து அகற்றுவதையும், கிராம சுயராஜ்யம் என்ற கருத்தை பலவீனப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்திற்காக நாங்கள் போராடுவோம்” என்றார்.

Tags : VP ,G Ram G ,Rahul Gandhi ,NEW DELHI ,RAKULGANDHI ,VIB ,JI RAM JI ,Delhi ,National Rural ,Rajnatmak Congress ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...