×

பொதுப்பிரிவில் இருந்து தேர்வு மும்பை, புனேவுக்கு பெண் மேயர்

மும்பை: மும்பை, புனே உள்ளிட்ட மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், மேயர் தேர்தல் 28ம் தேதி நடக்கிறது. இதனிடையே, மும்பை மாநகராட்சி உட்பட அனைத்து மேயர் பதவிகளுக்குமான இட ஒதுக்கீட்டை தீர்மானிப்பதற்கான குலுக்கல் மந்திராலயாவில் நேற்று நடந்தது. அதில் மும்பை மேயர் பதவி, பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதே போல புனே, அகில்யாநகர், அகோலா போன்ற மாநகராட்சிகளிலும் பெண்களுக்கு மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மும்பை மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Tags : Mumbai, Pune ,Mumbai ,Pune ,Maharashtra ,Mumbai Municipal Corporation… ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...