மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் உயிரிழந்த விவகாரம் : தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!!

சென்னை : மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தவறை சுட்டிக்காட்டியதால் மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் மேலாளர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலாளர் கல்யாணியை உடன் பணியாற்றியவரே கொன்றதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தீ விபத்து என நாடகமாடிய நிலையில் கொலை என்பதை கண்டுபிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: