×

பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்பிக்கள் வருகைப்பதிவை கணக்கெடுக்க புதிய முறை: சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு

லக்னோ: அகில இந்திய சபாநாயகர் மாநாட்டில் பங்கேற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை எம்பிக்களின் வருகைப்பதிவை உறுதி செய்ய புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி உறுப்பினர்கள் சபைக்குள் அமர்ந்திருக்கும்போது மட்டுமே வருகை பதிவு செய்யப்படும். சில எம்.பி.க்கள் வளாகத்தில் வருகை பதிவு செய்து விட்டு சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் வெளியேறும் நிகழ்வுகளும் உள்ளன. புதிய முறையில் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வந்து அமர்ந்து அதன்பிறகு பதிவு செய்தால் தான் வருகைப்பதிவு உறுதி செய்யப்படும். எனவே பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து, அனைத்து எம்.பி.க்களும் தங்கள் இருக்கைகளில் நிறுவப்பட்ட மல்டிமீடியா சாதனத்தைப் பயன்படுத்தி, தங்கள் ஸ்மார்ட் ஐடி கார்டு மூலமோ, கட்டைவிரல் ரேகையை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது தங்கள் தனிப்பட்ட அடையாள எண்ணை உள்ளிடுவதன் மூலமோ தங்கள் வருகையை பதிவு செய்வார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : MBIs ,Speaker ,Omberla ,Lucknow ,Om Birla ,All India Speaker's Conference ,
× RELATED நகர்ப்புற நக்சல்கள் மற்றும்...