×

ஸ்கூட்டி மீது பஸ் மோதல்: தம்பதி-குழந்தை பலி

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களா பள்ளியை சேர்ந்தவர் விஜய் (26). இவரது மனைவி சௌந்தர்யா (23). இவர்களது மகள் சன்மதி (1). கூலித்தொழிலாளியான விஜய், நேற்று தனது ஸ்கூட்டியில் மனைவி, மகளுடன் குளித்தலையில் இருந்து கரூர் சென்றார்.

இரவு 7.15 மணியளவில் லாலாபேட்டை என்ற இடத்தில் சென்ற போது எதிரே கரூரில் இருந்து வந்த தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன பஸ், ஸ்கூட்டி மீது மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Krishnarayapuram ,Vijay ,Karungala School ,Kulithalai ,Karur ,Soundarya ,Sanmathi ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...