சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் 24ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பெய்து வந்த வட கிழக்கு பருவமழை நேற்று முன்தினம் விலகியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை ஒருசில இ டங்களிலும், கடலோரப்பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அத்துடன் பனி மூட்டமும் காணப்படும்.
