×

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது: 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப்

பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழில் கல்விப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி, விடுதி மற்றும் போக்குவரத்து ஆகியற்வற்றுக்கான கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. இந்த முன்னோடி திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 36,419 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கீழ் இந்திய அளவில் உள்ள முதல் 100 உயர் கல்வி நிறுவனங்களின் 17 நிறுவனங்கள் அமையப்பெற்று தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

பெருந்தலைவர் காாமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.909 மதிப்பீட்டில் அரசு பொறியியல் கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணிமனைகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த அரசின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நமது மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உள்பட தொழில் நுட்ப துறையில் அரிய சாதனைகள் படைத்திட தமிழகத்தில் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் 10 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் ரூ.2172 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளஙக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...