சென்னீர்குப்பத்தில் நாளை மாலை திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அழைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் நாளை புதன்கிழமை மாலை 5 மணியளவில் சென்னீர்குப்பம் இ.பி.ஆபிஸ் எதிரில் உள்ள கஸ்தூரி மஹாலில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி தலைமை தாங்குகிறார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, கே.ஜெ.ரமேஷ், தொகுதி பார்வையாளர்கள் பி.டி.சி.செல்வராஜ்,நிவேதா ஜெசிகா, மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாநில சிறுபான்மையினர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர்கள் வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார்,

பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், கு.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ் செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன் எஸ்.காஞ்சனாசுதாகர், எஸ்.சங்கர் முன்னிலை வகிக்கின்றனர். ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் வரவேற்று பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்தும் வரும் 25ம்தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

எனவே, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: