சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். வரும் 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன. 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்க உள்ளார்
