×

வேதாரண்யம் அருகே மாணவர் இந்தியா ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம், ஜன.20: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர்ஷேக் அகமத்துல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மஜீத், ஹலீல் ஜபார்அலிகான் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், போதைப் பொருள்களுக்கு எதிரான பரப்புரை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு ஆகிய பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags : India ,Vedaranyam ,Student India ,Humanitanaya Democratic Party ,Vedaranyam, Nagai district ,Deputy Secretary ,Humanist Democratic Party ,Sheikh Ahmatulla ,
× RELATED விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர்கள் நியமனம்