×

அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

 

சென்னை: தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்ஐஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றோராக காட்டப்பட்டு இருந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாதவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த மாதம் (டிசம்பர்) 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தியது.

விடுபட்டவர்கள், புதியவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அதாவது ஜனவரி 18ம் தேதி (நேற்று முன்தினம்) வரை இந்திய தேர்தல் கமிஷன் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி 18ம் தேதி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 35 ஆயிரத்து 646 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்துள்ளனர். பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரின் பெயர்களை சேர்க்க வரும் 30ம் தேதி (வெள்ளி) வரை அவகாசம் அளித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Chennai ,Tamil Nadu ,Election Commission of India ,SIR ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு