- இந்தியா கூட்டணி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- காங்கிரஸ் வேட்பாளர் ஆய்வுக் குழு
- சென்னை
- இந்தியா
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- சத்தியமூர்த்தி பவன்
சென்னை: இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஆய்வுக்குழு தலைவர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், வேட்பாளர் ஆய்வுக்குழு தலைவர் டி.எஸ்.சிங் தியோ மற்றும் உறுப்பினர்கள் யஷோமதி தாகூர், ஜி.சி.சந்திரசேகர், அனில்குமார் யாதவ் மற்றும் தமிழக பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர் (வீடியோ கால் மூலம் பங்கேற்றார்), சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஆய்வுக்குழு தலைவர் டி.எஸ்.சிங் தியோ அளித்த பேட்டி: தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பிளாக் வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை நேர்காணல் செய்ய உள்ளோம். வேட்பாளர் தேர்வு குறித்து மட்டுமே குழு ஆய்வு செய்யும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். எந்தவித அறிவிப்பாக இருந்தாலும் அதனை தலைமை தான் அறிவிக்கும். இந்தியா கூட்டணி வலுவாக இருக்கின்றது. இந்த கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்றார்.
