அழகப்பா பல்கலையில் சமுதாய வானொலி

காரைக்குடி, ஜன.28:  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் என்.ராஜேந்திரன் வரவேற்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இணையவழியில் துவக்கி வைத்து பேசுகையில், சமுதாய வானொலி திட்டம் மூலம் அந்தப்பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் பேரிடர் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமுதாய வானொலி பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 310 சமுதாய வானொலி நிலையங்கள் செயல்படுகிறது, இதில் 40 நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசுகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்து தமிழகத்தில் இரண்டாவது பல்கலைக்கழகமாக இப் பல்கலைக்கழத்தில் துவங்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களையும், பல்கலைக்கழகத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என்றார். அமைச்சர் பாஸ்கரன், எம்.பி காத்திக் சிதம்பரம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், கலெக்டர் மதுசூதன் ரெட்டி, எஸ்.பி ரோக்கித்நாதன் ராஜகோபால் ஆகியோர் பேசினர்.

Related Stories: