செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார். 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும் என முதல்வர் கூறினார்.
