சென்னை : ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான்” என்றார்.
