திராவிட மனப்பான்மை வெறும் அரசியல் சார்ந்தது அல்ல: புக்கர் பரிசு விருதாளர் பானு முஷ்டாக் பேச்சு

சென்னை: பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவில் புக்கர் பரிசு விருதாளர் பானு முஷ்டாக் கலந்து கொண்டு பேசியதாவது. திராவிட மொழிகள் ஒருபோதும் அலங்கார மொழிகளாக இருந்ததில்லை. அவை விவாதம், எதிர்ப்பு, நெறிமுறைகள் மற்றும் அன்றாட வாழ்வின் மொழிகளாக இருக்கின்றன. சாதி, ஆணாதிக்கம், அதிகாரம் மற்றும் அநீதி குறித்த பல நூற்றாண்டு கால கேள்விகளை தங்களுக்குள் கொண்டுள்ளன. மற்றும் திராவிட உலகம் என்பது சாதி, மேலாதிக்கம், ஆணாதிக்கம், மத அடிப்படை வாதம், கலாச்சார ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கிறது. மனித மதிப்பு என்பது வர்ணம், மதம் அல்லது பரம்பரையில் இருந்து வருவதல்ல. மாறாக மனிதனாக இருப்பதில் இருந்துதான் வருகிறது என்று அது வலியுறுத்துகிறது.

பெரியார் போன்ற சிந்தனையாளர்கள், சுயமரியாதையை நீதியின் அடிப்படையாக முன்னிறுத்தி ஒரு சக்திவாய்ந்த நெறிமுறை மற்றும் அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். திராவிடக் கண்ணோட்டத்தில் சமூக நீதி என்பது தர்மமோ அல்லது சலுகையோ இல்லை. அது உரிமையை மீட்டெடுப்பதாகும். திராவிட மனப்பான்மை என்பது வெறும் அரசியல் சார்ந்தது மட்டும் அல்ல, அது ஆழமான கலாச்சார மற்றும் நெறிமுறை சார்ந்தது. எது எதை உணர்த்துகிறது எ்ன்றால், கல்விதான் சமத்துவத்தின் அடித்தளம் என்றும், பகுத்தறிவுதான் சுதந்திரத்தின் அடிப்படை என்றும் சுயமரியாதை தான் நீதியின் மையம் என்றும் உணர்த்துகின்றன. இதுபோன்ற ஒரு நிலையை சாத்தியமாக்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு பானு முஷ்டாக் பேசினார்.

Related Stories: