- நொய்யால் நதி
- துணை ஜனாதிபதி
- கோயம்புத்தூர்
- ராதாகிருஷ்ணன்
- திருப்பூர்
- அமைச்சர்
- முத்துசாமி
- கலெக்டர்
- பவன் குமார்
- கண்ணன்
- எஸ்.பி. கார்த்திகேயன்...
கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் பவன்குமார், போலீஸ் கமிஷனர் கண்ணன், எஸ்.பி கார்த்திகேயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பாஜ சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பொங்கல் திருநாள் என்பது விவசாய பெருமக்கள் அறுவடை முடிந்து ஆனந்தமாக இல்லங்களில் மட்டுமல்லாமல், ஊரே கூடி மகிழ்ந்திருப்பது. இதில் எந்த பேதத்திற்கும் இடமில்லை. சூரியனை வழிபடும் நாளாக அது அமைந்தாலும், இயற்கை தந்த வரங்களுக்கெல்லாம் நன்றி சொல்லுகின்ற தமிழ் விழாவாக அது அமைந்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். பிற பகுதிகளில் வாழக்கூடிய விவசாய பெருமக்களுக்கு சங்கராந்தி வாழ்த்துக்கள்.
நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் இந்த பகுதி மக்களின் எண்ணமாக இருக்கிறது. நொய்யல் ஆற்றை மீட்பது என்பது தஞ்சை விவசாய மக்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய பேராக அமையும். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூரில் இன்று கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தோட்டத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்.
