×

‘சென்னை உலா’ என்ற பெயரில் வின்டேஜ் பேருந்து சேவை தொடக்கம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

 

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” என்ற பெயரில் விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

“சென்னை உலா” பேருந்து – ”ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்” சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும்.

சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது. 1 பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை மற்றும் நடத்துனரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16-18 காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரைஇயக்கப்படும். வார நாட்களில் மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும்
வார இறுதி நாட்கள்/பொது விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் இயக்கப்படும்.

Tags : Chennai Ula ,Minister ,Sivashankar ,Chennai ,Chennai Metropolitan Transport Corporation ,Anna Square ,Minister of Power ,Sivashankar Kodi… ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...