×

இசைக்கலைஞர்களை அழைத்து முதல்வர் கலந்துரையாடல்

 

சென்னை: தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் ‘வைப் வித் எம்கேஎஸ்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோட் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இசைக் கலைஞர்ளை அழைத்து அவர்களுடன் முதல்வர் கலந்துரையாடியிருக்கிறார்.  இந்நிகழ்ச்சியின், 2வது எபிசோடுக்கான முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் ஆண்டனி தாஸ், கானா முத்து, பிரியங்கா, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடியிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் முழு காணொளி விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Tags : CM ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...