மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன. 27: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை நகரில் காவிரி நகரிலிருந்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி வரை டிராக்டர் ஊர்வலத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் 10க்கும் மேற்பட்ட டிராடர்களுடன் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்தனர். அதையும் மீறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மயிலாடுதுறை காவேரி நகரில் துவங்கிய பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் காவேரி நகர் பகுதியிலேயே தங்களது போராட்டத்தை நடத்தினர், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், ஜெகமுருகன், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ராயர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: