×

அம்போன்னு விட்டுட்டாங்க… கோயில் கோயிலாக ஓபிஎஸ் சிறப்பு பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் உரிமை மீட்பு அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இவரது நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது. அதிமுக மற்றும் பாஜ தலைமை கண்டுகொள்ளாததால் விரக்தி மனநிலையில் உள்ளார்.

ஓபிஎஸ் அரசியலில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் குலதெய்வம் கோயிலில் வழிபடுவது வழக்கம். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அவர் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார்.

ஆண்டாள் பிறந்த நந்தவனம், பெரியபெருமாள் சன்னதியிலும் தரிசனம் செய்தார். வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், ‘சார் பேட்டி’ என்றனர். அதற்கு ஓபிஎஸ், ‘தைக்கு பிறகு…’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறிவிட்டு சென்றார். பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது குலதெய்வம் கோயிலான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு சென்றும் ஓபிஎஸ் சிறப்பு பூஜை செய்தார்.

Tags : Ambonnu ,OPS ,Srivilliputhur ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,AIADMK ,Volunteer Rights Recovery Organization ,Tamil Nadu ,BJP ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...