மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஊதியம், வேலை நேரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய மற்றும் மாநில தொழிலாளர் நலத்துறை செயலர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை 6 வாரம் தள்ளி வைத்தனர்.
