×

ஆம்னி பஸ்கள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

சென்னையிலிருந்து இன்று 13ம் தேதியும், நாளை மறுநாள் 14ம் தேதியும் மதுரை செல்வதற்கு ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளன. இந்த கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Pongal ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...